“எட்டு மாதம் அல்ல; எண்பது ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க முடியாது” - செங்கோட்டையன் அதிரடி...

செங்கோட்டையன்

“தி.மு.கவினர் எட்டு மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும் என்று கூறிவருகிறார்கள். எட்டு மாதங்களில் அல்ல, எண்பது ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க., ஆட்சியை அவா்களால் கலைக்க முடியாது” என கோபிச் செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.  

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில், அ.தி.மு.க புறநகர் மாவட்டச் செயல்வீரர்கள் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், எம்.பி., சத்தியபாமா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க என்னும் கட்சி அழிந்துவிட்டது. தினமும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதன் மூலம் கட்சி வளர்ந்துவிடும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும். கடந்த தோ்தலில் தி.மு.க பல கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால்தான் பல தொகுதிகளில் நூறு, இருநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்கள். இல்லாவிட்டால், பத்து தொகுதிகளில் கூட தி.மு.க வெற்றி பெற்றிருக்காது. எம்.ஜி.ஆா், அம்மா போல் நடிகராக இருந்துவிட்டு கட்சி ஆரம்பித்தால் ஜெயித்துவிடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள். அது இனி யாராலும் அப்படி வர முடியாது” என்று ரஜினி மற்றும் கமலை சாடிவிட்டு அமர்ந்தார்.

இதனையடுத்து பேசியப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “அ.தி.மு.கவை உருவாக்கிய புரட்சித் தலைவா் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு திட்டங்களைச் செயல்படுத்தினார். இந்தியாவில் தமிழகம் எங்கே உள்ளது என்று உலகில் உள்ள பலரையும் தேட வைத்தவா் அம்மா. அப்படிப்பட்ட அ.தி.மு.க என்னும் பேரியக்கத்தின் ஆட்சியை தி.மு.கவினர், ‘இன்று ஆட்சி கலைந்துவிடும். நாளை கலைந்துவடும்’ என்று கூறி வருகின்றனர். தற்போது எட்டு மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும் என்று கூறி வருகிறார்கள். எட்டு மாதங்களில் அல்ல, எண்பது ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க ஆட்சியை அவா்களால் கலைக்க முடியாது. அரசு பல்வேறுத் திட்டங்ளை செயல்படுத்த முனைப்புடன் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு ஏற்படும் மாற்றங்களின் மூலம் இனி அ.தி.மு.க தொண்டா்கள் கை காட்டுபவா்களுத்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!