வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (13/02/2018)

கடைசி தொடர்பு:03:30 (13/02/2018)

அரசரடியில் அரசியல் பேசப்போகும் உலக நாயகன்..

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல், ரஜினிக்கு முன்பாக அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளார். முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை எல்லோரையும்போல் செண்டிமெண்டாக மதுரையில் நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அவருடைய ரசிகர்கள்(இனி தொண்டர்கள்) தீவிரமாக செய்து வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு ஆன்லைனில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிரார் கமல்.

அரசரடியில் அரசியல்


வருகின்ற 21-ம் தேதி, அவர் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரத்தில் அமைந்திருக்கும் கலாம் நினைவிடத்தில் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கமல். கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அங்கே அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பு பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக மதுரைக்கு வரும் கமல், அன்று மாலை அரசரடி மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள முதல் பொதுக்கூட்டத்தில் தன்னுடைய கொள்கைகளை விளக்கிப் பேசுகிறார். 

அழகர்

இதுபற்றி மதுரை மாவட்டப் பொறுப்பாளர் எம்.அழகரிடம் பேசினோம், ''ராமநாதபுரத்தில் நடப்பதாக இருந்தப் பொதுக்கூட்டத்தை நான்தான் வற்புறுத்தி மதுரைக்கு மாற்ற வைத்தேன். அதுக்கு காரணம், அரசியல் ரீதியாக மதுரைக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மதுரையில் பேசப்படுகிற அரசியல் தமிழர்கள் மத்தியில் உடனே பரவும். மற்ற மாவட்டங்களிருந்து வருகிறவர்களுக்கும் பொதுமக்களுக்கும்  மதுரையே வசதியாக இருக்கும். அதனால்தான் இங்கேயே பொதுக்கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். இரண்டொரு நாளில் தலைவரைச் சந்தித்து அடுத்தடுத்து ஏற்பாடுகளை செய்யவுள்ளோம்'' என்றார். புதுக்கட்சியை வரவேற்று மதுரை மாநகரரமெங்கும் விளம்பரங்களில் அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்,

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க