வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (13/02/2018)

கடைசி தொடர்பு:19:19 (13/02/2018)

இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு, chandrababu naidu

இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் (The association for democratic reforms) இந்திய முதல்வர்களின் சொத்து மதிப்பு மற்றும் பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், முதல் இடம் பிடித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு, இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருக்கு, 129 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. 48 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்திய முதல்வர்களிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வராக, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மொத்த சொத்துகளின் மதிப்பு 26 லட்சம்தான். இவருக்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 30 லட்ச ரூபாய். ஏழ்மையான முதல்வர்கள் பட்டியலின் மூன்றாம் இடத்தில், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 55 லட்ச ரூபாய்.