ஜெ. மரணம் தொடர்பாக ஆஜர்! விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி விசாரணை | Vivek jayaraman appeared before justice arumugasamy commission

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (13/02/2018)

கடைசி தொடர்பு:19:17 (13/02/2018)

ஜெ. மரணம் தொடர்பாக ஆஜர்! விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் இன்று ஆஜரானார்.

vivek jayaraman
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை, எழிலக வளாகத்தில் செயல்படும் விசாரணை ஆணையத்தின் முன், அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக், தீபா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக விவேக் ஜெயராமனுக்குத் தெரிந்திருக்கும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். இந்நிலையில், சம்மனை ஏற்று இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜராகியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க