வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (13/02/2018)

கடைசி தொடர்பு:16:06 (13/02/2018)

`நான்தான் இனி சூப்பர் ஸ்டார்' - மக்கள் கூட்டத்தில் கலகலத்த தினகரன்

 `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிபோல நான் திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும், என்னை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இனிமேல் நான் சூப்பர் ஸ்டார்' எனப் பேசி தினகரன் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தினகரன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒவ்வொன்றாகச் சென்று மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தில் மக்களைச் சந்தித்துப் பேசிவருகிறார் தினகரன். செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பெரும் கூட்டம் திரண்டு, தினகரனுக்கு உற்சாக வரவேற்பைக் கொடுக்கிறார்கள். இதனால், தினகரன் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அவர் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் காணமுடிகிறது.

தினகரன்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஏரியாவான ஒரத்தநாடு பகுதியில் தினகரன் மக்களைச் சந்தித்தார். அப்போது, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ தங்கமுத்து என்பவருக்கு உதவியாக பையைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் சென்றவர்தான் வைத்திலிங்கம். இப்போது அவரின் நிலை என்ன. உங்களைப் பார்க்க அவர் வந்தால், அவரிடம் கரூர் அன்புநாதன் பற்றி கேட்டீர்கள் என்றால், உங்கள் பக்கத்திலேயே நிற்காமல் ஓடிவிடுவார்.

நான், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.போல 150 படங்களில் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆரோடு ஜெயலலிதா சேர்ந்து நடித்ததுபோல நடிக்கவில்லை. திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கினார் ரஜினிகாந்த். ஆனால், நான் இவர்களைப்போல படத்தில் நடிக்கவில்லை. உங்களைப் போலவே நானும் சாதாரணமான ஆளாகத்தான் இருந்தேன். மக்கள் என்னை ஆர்.கே.நகரில் வெற்றிபெற வைத்து, சூப்பர் ஸ்டாராக ஆக்கி உச்சிக்குச் செல்லவைத்துவிட்டார்கள். நீங்கள் கொடுக்கிற வரவேற்பு என்னை சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டது. இனிமேல் நான் இப்படித்தான்' எனக் கலகலத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க