போலீஸை அதிர்ச்சியடைய வைத்த விபத்தில் சிக்கிய கார்!

  

இளையான்குடி நான்குவழிச்சாலையில் நேருக்கு நேர் கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி நான்குவழிச்சாலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று இளையான்குடியில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காரும் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் இளையான்குடி அருகேயுள்ள திருவள்ளூர்  கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர். இந்தச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் காரை கைப்பற்றி சோதனை செய்தபோது சிவகங்கையில் இருந்து வந்த  காரில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இந்த காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்தபோது, நாலுகோட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் என்றும் இவர்கள் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்  ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் மானாமதுரை சிவகங்கை பகுதியைச் சுற்றியுள்ள பாலியல் குற்ற வழக்குகளில் இவர்களின் பங்கு என்னவாக இருக்கும்; இவர்களுக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது; இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்கிற பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!