ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற இளைஞர்கள் கைது!

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற வாலிபர் சங்கத்தினர்.
 

ரயில்வேயைத் தனியார் மயமாக்க முயல்வதைக் கண்டித்தும் பணி ஓய்வு பெற்றவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலை, ராமநாதபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் ஆதிரெத்தினம் தலைமையில் மறிக்க முயன்றனர். அப்போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் டி.எஸ்.பி எஸ்.நடராஜ் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 65 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!