வெளியிடப்பட்ட நேரம்: 01:02 (14/02/2018)

கடைசி தொடர்பு:11:25 (14/02/2018)

இந்தியா வரலாற்று வெற்றி... தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது!

கிரிக்கெட், cricket

போர்ட் எலிசபெத்தில் நடந்த 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஆறு ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரை 4-1 என வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவை முதன்முறையாக சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி.

போர்ட் எலிசபெத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார். 275 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பௌலர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 42.2 ஓவர்களில்  201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். அந்த அணியில் அதிகபட்சமாக, அம்லா 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியாவுக்கு ராசி இல்லாத மைதானம் என்று அழைக்கப்பட்ட போர்ட் எலிசபெத்தில், முதன்முறையாக வென்றுள்ளது இந்திய அணி.