வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (14/02/2018)

கடைசி தொடர்பு:11:37 (14/02/2018)

காதலர் தினத்துக்கு 2 கோடி ரோஜா பூக்கள் ஏற்றுமதி! - அசத்திய விவசாயிகள்

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 2 கோடி ரோஜாக்களை ஏற்றுமதி செய்து ஓசூர் விவசாயிகள் அசத்தியுள்ளனர். உலகமெங்கும் காதலர் தினத்தன்று தங்களின் காதலை வெளிப்படுத்த அதிகம் ரோஜா மலர்களையே பயன்படுத்துகின்றனர். எனவேதான் காதலர் தினத்தன்று உலகச் சந்தையில் கொய்மலருக்கான தேவை அதிகம், மனம் கவரும் வகை வகையான ரோஜா மலர்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் வகிக்கின்றது. அதுவும் ஓசூர் பகுதிகளில் உற்பத்தியாகும்  ரோஜாக்களுக்கு உலகச் சந்தையில் கூடுதல் வரவேற்பு

 கொய்மலர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1475 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், பைரமங்கலம், கெலமங்கலம் பகுதியில் 250 அரசு உதவி பெறும் ரோஜாமலர் பண்ணைகளும், 55 தனியார் ரோஜாமலர் பண்ணைகளும் ஆண்டு முழுவதும் ரோஜா சாகுபடி செய்கின்றனர். தமிழக அரசு பசுமைக்குடில் (கிரீன்ஹவுஸ்) அமைத்து ரோஜா உற்பத்தி செய்ய 4.67 லட்சம், 8.90 லட்சம், 16.88 லட்சம் மதிப்பில் சிறு, குறு மற்றும் பண்ணை விவசாயிகளுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது. பசுமைக்குடில் முறைகளில் வளர்க்கப்படும் ரோஜா செடிகளில் 45 நாள்களுக்கு ஒரு முறை ரோஜாக்களை அறுவடை செய்கின்றனர். இந்த ஆண்டுக் காதலர் தினத்தை முன்னிட்டு தாஜ்மஹால், கார்வெட்டா, ரெட் ரோஸ், ஹரிசம், ஜெயன்ட், ரெட் பர்ஸ்ட், ரெட், ஒயிட், எல்லோ போன்ற 45 வகை பெஷலாக உற்பத்தி செய்து  ரோஜாக்களை ஏற்றுமதி செய்துள்ளனர்.

இங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், துபாய், ஹாலந்து, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளதால் அரசு சார்பு நிறுவனமான, "டான்ப்ளோரா'‘ ஓசூரில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

கொய்மலர்

இந்த வருடம் ரோஜா ஏற்றுமதியில் தாஜ்மஹால் வகை ரோஜா அதிகளவு உற்பத்தி செய்து மொத்தம் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர். 

கொய்மலர்

பிப்ரவரி 14 காதலர் தினத்திற்காக 20 பூக்கள் கொண்ட பஞ்ச் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களில் 80%  ஓசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால் பலகோடி ரூபாய் அன்னிய செலாவணி பெறுவதாக ஓசூர் விவசாயிகள் பெருமை அடைகின்றனர்.