வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/02/2018)

ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய இன்ஜினீயரிங் மாணவருக்கு நடந்த துயரம்!

இன்ஜினீயரிங் மாணவர்

ஓடும் ரயிலிலிருந்து இறங்க முற்பட்ட இன்ஜினீயரிங் மாணவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோட்டை அடுத்த மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கெளரவ் குமார் (19). இவர் வேலூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எல்க்ட்ரானிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இரண்டாமாண்டு படித்து வந்தார். வேலூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான ஈரோட்டுக்கு ரயில் மூலமாக மதியம் 12.10 அளவில் வந்தவர், ஈரோடு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே ரயிலிலிருந்து இறங்கியிருக்கிறார். ரயிலின் எதிர்திசையில் இறங்கியதால் நிலைத்தடுமாறிய கெளரவ் குமார் ரயில்வே தண்டவாளத்தில் தவறிவிழுந்து சக்கரத்தில் சிக்கி, சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பரபரப்பான மதிய வேளையில் ஈரோடு ரயில்வே ஜங்ஷனில் இன்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.