சென்னையில் வாகன ஓட்டிகளைக் கலங்கடித்த காதலர்களின் பைக் ஸ்டன்ட்!

Bike Stunt

காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள், காபி ஷாப்கள், திரையரங்கங்கள் காதலர்களால் நிரம்பி வழிந்தன. பரிசுகள் பரிமாறியும் ஜோடியாக வெளியிடங்களுக்குச் சென்றும் காதலர்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய இடங்களில் காதலர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையிலும் காதல் ஜோடிகளை அதிகம் பார்க்க முடிந்தது.

சென்னை பெசன்ட் நகர் சாலையில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் நிகழ்த்திய சாகசம் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அத்துடன் ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தன் காதலியுடன் பைக்கில் சென்ற இளைஞர் திடீரென பைக்கின் முன்சக்கரத்தை உயர்த்தியபடி, பைக்கை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். பின்னால் இருந்த அவருடைய காதலி அச்சத்தில் அவரை கட்டியணைத்தபடி அமர்ந்திருந்தார். அந்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால், அவருடைய காதலிக்கு தலைக்கவசம் இல்லை.

Bike Stunt


“கொண்டாட்டங்கள் நல்லதுதான். ஆனால், அது பாதுகாப்பானதாகவும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராததாகவும் இருக்க வேண்டும். இப்படி சாகசம் செய்யும்போது திடீரென அசம்பாவித சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அந்த இளைஞர்தான் காலத்துக்கும் அதை நினைத்து தேம்ப வேண்டியிருக்கும். மேலும், இதுபோன்ற வீண் சாகசங்களால் சாலையில் சாதாரணமாகச் செல்பவர்களுக்கும் பிரச்னைகள்தான்” என்று அந்த வழியாகச் சென்றவர்கள் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!