காதலர்களுக்குத் தேநீர் இலவசம்! - அசத்திய அமுலு அம்மாள் டீக்கடை

ammu tea stall

`காதலர் தினத்தையொட்டி இன்று கடைக்கு இணையராக வருபவர்களுக்குத் தேநீர் இலவசம்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து அசத்தியுள்ளார் சாலையோர டீக்கடைக்காரர் ஒருவர். 

பொன் சுதா
பொன் சுதா

வழக்கம்போல ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடை ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தபோதுதான் இந்த டீக்கடை பற்றிய ஒரு பதிவு கண்ணில்பட்டது. பதிவுக்குச் சொந்தக்காரர் திரைப்பட  இயக்குநர் பொன்சுதா. அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்...

``என் மகள் அனிச்சத்தைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் அவள் சாப்பிட ஏதாவது கேட்க, சின்ன நீலாங்கரை சாலையில் இருந்த `அமுலு அம்மாள்’ என்னும் டீக்கடையில் வாகனத்தை நிறுத்தினேன். காதலர் தின சிறப்பு சலுகை பற்றிய வித்தியாசமான அறிவிப்பு எங்களை வரவேற்றது. இணையாய் வருபவர்களுக்கு தேநீர் இலவசம். காதலர் தின சிறப்பு அறிவிப்பு என்று குறிப்பிட்டுருந்தனர். அந்தக் கடையில் இருந்த ஒரு பெண்மணியிடம், இதுவரை யாராவது வந்தார்களா என்று கேட்டேன். 10 ஜோடிகள் வந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். இது ஒருவேளை அவர்களின் வியாபார யுக்தியாக இருக்கலாம். ஆனால், இதில் அப்படியென்ன அவர்களுக்கு லாபம் வந்துவிடப்போகிறது. அனைத்தையும் தாண்டி சாதாரண ரோட்டுக் கடைக்காரர்களுக்கு காதலை வாழ்த்த, அங்கீகரிக்க மனசிருக்கும் வரை.. சாதி, மத வெறியர்கள் முகத்தில் உமிழ்ந்து, தமிழகத்தில் காதல் என்றென்றும் செழிக்குமென நம்பிக்கை தோன்றியது'’ என்றார் உற்சாகம் பொங்க! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!