வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (14/02/2018)

கடைசி தொடர்பு:20:23 (14/02/2018)

'போலீஸின் வித்தவுட் ஹெல்மெட் கேஸ்'- பணம் வசூலால் திகைத்துப்போன டிரைவர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று நடைபெற்ற வாகன சோதனையில் ஆம்பூர் காவல் துறை அதிகாரிகள் 'டாடா ஏஸ்' குட்டி யானை வாகனம் ஓட்டி வந்தவர் மீது வித்தவுட் ஹெல்மெட் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Police


ஆம்பூர் நகரக் காவல்துறையினர் இன்று ஆம்பூர் பகுதியில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பேரணாம்பட்டு ரோட்டில் மதியம் நடத்திய சோதனயில், அவ்வழியே வந்த ஆம்பூர் சின்ன மசூதி தெருவைச் சேர்ந்த ஜமீல் முகமது என்பவரது, டாடா ஏஸ் 'குட்டி யானை' வாகனத்தை மடக்கிய போலீஸார், லைசன்ஸ் ஆர்சி புக், இன்சூரன்ஸ் என அனைத்தையும் கேட்டுள்ளனர். போலீஸ் கேட்ட அனைத்து டாக்குமென்ட்களையும் காண்பித்தும் ஏதாவது ஒரு கேஸ் போட வேண்டும் என்ற நோக்கில் வித்தவுட் ஹெல்மெட் என்று கேஸ் போட்டு 100 ரூபாய் வசூலித்துள்ளனர். போலீஸிடம் ரசீதை வாங்கிய ஜமீல் முகமது, வித்தவுட் ஹெல்மெட் என்று கேஸ் போட்டுள்ளதை பார்த்து செய்வது அறியாமல் திகைத்துப் போய் அங்கிருந்து தன் வாகனத்தை எடுத்துகொண்டு கிளம்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க