மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்த கலெக்டர்!- மக்கள் கொந்தளிப்பு

மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்ததாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ்மீது மாற்றுத்திறனாளிகளுடன் வந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகளின் குறை கேட்கும் முகாம் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து காலையிலேயே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். தாமதமாக  அங்கு வந்த கலெக்டர் வீரராகவராவ்  மனுக்களை வாங்காமல்  கிளம்பி சென்றார்.

வீரராகவராவ்

அவர் எங்கே சென்றார், எப்போது வருவார் என்பது மாற்றுத்திறனாளிகளிடமும், அவர்களுடன் வந்த உறவினர்களுக்கும் தெரிவிக்கப்படாததால் எல்லோரும் கோபப்பட்டு பேசத் தொடங்கினர். அதிலும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன வந்தவர்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இரண்டு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு அங்கு வந்த கலெக்டர், 'போராட்டம் செய்துவரும் விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றதாக' கூறியதை அங்கிருந்த  மாற்றுத்திறனாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ''அதிகாரிகள் எப்போதுமே எங்களை காக்க வைத்து மனிதாபிமானமில்லாமல்  உதாசீனப்படுத்துகிறார்கள் என்று  நம்மிடம் புகார் தெரிவித்தார்கள்.

''மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்ப்பு முகாமை தாலுகா அல்லது ஒன்றிய அளவில் நடத்தினால் அவர்களுக்கு நேரில் சென்று உதவுவதாக இருக்கும். குக்கிராமங்களிலிருந்து மிகவும் சிரமத்துடன் நான்கைந்து பேருந்து மாறி மதுரைக்கு வந்து காத்து கிடக்கும் நிலையை மாற்ற வேண்டும்'' என்றும் மாற்றுத்தினாளிகளுடன் உடன் வந்தவர்கள் கூறினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!