வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/02/2018)

கடைசி தொடர்பு:21:20 (14/02/2018)

நட்சத்திர ஹோட்டல் கழிவு நீரால் ஏற்பட்ட விபரீதம்!- விஷவாயு தாக்கி மூவர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் ஹோட்டல் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு தாக்கி மூவர் பலி

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போந்தூர் பகுதியில் TUSCANY VALLEY என்ற சொகுசு ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியதால், அதை சுத்தம் செய்யும் பணிக்காக சென்னையை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் மாரி ஆகியோர்  ஈடுபட்டனர். ஹோட்டலில் பணிபுரியும் ரவி என்பவரும் அவர்களுடன் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு கசிந்தது. கழிவுநீரை அகற்றும் பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவருக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க