ஐம்பொன் சிலை திருட்டு ! வெளிநாட்டுக்கு கடத்தலா?

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட  ஐம்பொன் சாமி சிலைத் திருடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தொடரும் சிலை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

                             

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அமைந்துள்ளது அம்பாப்பூர் கிராமம். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட அம்மன் மற்றும் வீரபத்திரர் சிலைகள் இருந்துள்ளது. இந்நிலையில் திருவிழா நடத்துவதற்காக கோவிலைத் திறந்து பார்த்தபோது கோவிலில் சிலை காணாமல் போயியுள்ளது. வீரபத்திரர் சாமி சிலை ஒன்றரை அடி உயரமுள்ள 10 கிலோ எடைகொண்டது.

                        

ஐம்பொன்னால் ஆன அதீத நுட்பமான சிலை. இன்றையக் காலகட்டத்தில் பல லட்சம் மதிப்புடையது. இந்தச் சிலை  கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததும் அதிர்ச்சிடைந்த கிராம மக்கள் இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விக்கிரமங்கலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

                                 

கடந்த 2008-ம் ஆண்டு இதே கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு  கடத்தப்பட்டது சம்மந்தமாக வெளிநாட்டைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்பவரை சிலைக்கடத்தல் பிரிவு போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!