புளோரிடா மாகாணப் பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு! 17 பேர் பலி

துப்பாக்கிச்சூடு, shooting

அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவில் இயங்கி வரும் பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர் என்று முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளியில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளியினுள் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக போலீஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!