தேசிய சாம்பியனாகி வரலாறு படைத்தது தமிழக மகளிர் கால்பந்து அணி! | Tamil Nadu Senior Women’s team becomes champion in National Football Championship

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (15/02/2018)

கடைசி தொடர்பு:11:00 (15/02/2018)

தேசிய சாம்பியனாகி வரலாறு படைத்தது தமிழக மகளிர் கால்பந்து அணி!

களிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக சாம்பியனாகி அசத்தியுள்ளது தமிழக மகளிர் கால்பந்து அணி.

தமிழக மகளிர் கால்பந்து அணி சாம்பியன்

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் 23வது சீனியர் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த, இறுதி ஆட்டத்தில் 18 முறை சாம்பியனான மணிப்பூர் அணியை தமிழக அணி சந்தித்தது. மணிப்பூர் பலம் வாய்ந்த அணியாக இருந்ததால், அந்த அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் தோல்வியையே சந்திக்காத தமிழக வீராங்கனைகள் ஆட்டம் தொடங்கியதுமே அதிரடி காட்டி 3வது நிமிடத்திலேயே  முத்தான முதல் கோலை திணித்து மணிப்பூரை திணறடித்தனர்.

கேப்டன் இந்துமதி இந்த கோலை அடித்தார். தொடர்ந்து 40வது நிமிடத்தில் இந்துமதி இரண்டாவது கோலையும் அடிக்க முதல் பாதியில் தமிழக அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் மணிப்பூர் வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தைப் தீவிரப்படுத்தினர். இரு கோல்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தமிழக அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டது. எனினும், மணிப்பூர் அணி வீராங்கனை ரத்தன்பாலா 57வது நிமித்தில் ஒரு கோல் திருப்பினார். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில், மணிப்பூர் வீராங்கனைகள் கோல் அடிக்க எடுக்க முயற்சிகளை  தமிழக வீராங்கனைகள் தகர்த்து எறிந்தனர்.

முடிவில், தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக தேசிய சாம்பியன் ஆனது.  தொடரில் சிறந்த வீராங்கனையாக தமிழக அணி வீராங்கனை இந்துமதி பெற்றார். முதல்முறையாக தேசிய சாம்பியனாகியுள்ள தமிழக அணிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. தமிழகம் வரும் வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க