இந்தியாவில் முதல் தர பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வு| | Karaikudi alagappa university Tops Indian universities

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (15/02/2018)

கடைசி தொடர்பு:13:00 (15/02/2018)

இந்தியாவில் முதல் தர பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வு|

அழகப்பா பல்கலைக்கழகம்


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல்தர பல்கலைக்கழகமந்த் தேர்வுசெய்யப்பட்டு, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா பேசும்போது, 'இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அறிவுறுத்தலின்படி, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு, இந்தியாவில் உள்ள 819 பல்கலைக்கழகங்களை அதன் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன்களின் அடிப்படையில் மூன்று வகையாகத் தரப்படுத்தியுள்ளது. முதல் தர வகையில் 32 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், எங்கள் பல்கலைக்கழகம் முதல் தரம் பெற்று முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 21 அரசு பல்கலைக்கழகங்களுள் அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே முதல் தர பல்கலைக்கழகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு, பல்கலைக்கழகத் தர வரிசையைத் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுமத்தின் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பீட்டுப் புள்ளி அடிப்படையில் தேர்வுசெய்கிறது. கூட்டு மதிப்பீட்டுப் புள்ளி 3.50-க்கு மேல் எடுத்த பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த முதல் தர வகைக்குத் தகுதிபெறுகின்றன. ஆனால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மூன்றாவது சுற்று தர மதிப்பீட்டில், கூட்டு மதிப்பீட்டுப் புள்ளி 3.64 எடுத்துள்ளதால், இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளது. இப்படி முதல் தரம் பெற்ற பல்கலைக்கழகம் தானாகவே புதிய துறைகள், மையங்கள், பாடப் பிரிவுகள் தொடங்கிக்கொள்ளலாம். மேலும், திறமையான ஆசிரியர்களுக்கு, சம்பளத்தோடு கூடுதல் ஊக்கத்தொகையை பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலோடு  வழங்க அனுமதி பெற்றுள்ளது .உலகத் தரம் வாய்ந்த முதல் ஐந்நூறு பல்கலைக்கழங்கள் இணைந்து,  புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் ஏராளமான, பல்கலைக்கழகம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களைச்  செயல்படுத்த, சுயமாக முடிவுசெய்துகொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவே, முதல் தர பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்கும் சுதந்திரம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close