`இவர் இருந்தால் சம்பாதிக்க முடியாது' - எஸ்.பி-க்கு எதிராக இன்ஸ்பெக்டர்கள் விபரீத மல்யுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் எடுக்கத் தடை இருந்தபோதும், காவல்துறையினரின் ஆதரவோடு மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானியின் கெடுபிடி காரணமாகக் காவல்துறையினரே மறைமுகமாக அவருக்கு எதிராகப் பிரச்னைகளைத் தூண்டிவருகின்றனர்.

காஞ்சிபுரம் பாலாறு மணல்

காஞ்சிபுரம் பகுதியில்  நேற்று மணல் கடத்தலில்  ஈடுபட்டவர்களை எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீம் பிடித்து வந்தனர். அதில் சிலர்மீது வழக்குப் பதியப்பட்டு சிறைக்கு அனுப்பினார்கள். சிலர் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட சிலரில் ஒருவர் பாலுசெட்டிப் பகுதியில் இறந்துவிட்டார்.  காவல்துறையினர் அடித்ததால்தான் அவர் இறந்துவிட்டதாகக் கூறி சில சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து என்ன நடந்தது என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார்.

சந்தோஷ் ஹதிமானி காஞ்சிபுரம் எஸ்பிகாவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். “எஸ்.பி.தான் மணல் எடுக்க விடாமல் கெடுபிடி காட்டுகிறார். அதனால்தான் இவர்களைப் பிடிக்கிறோம் என சில இன்ஸ்பெக்டர்கள் போராட்டக்காரர்களிடம் சொல்லி வருகிறார்கள். காவல்துறைக்கு மாத வருமானம் போய்விட்டது. வேலூர் மாவட்டம் மாமண்டூர் பகுதியில் எடுக்கும் மணல் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி வழியாகக் கடத்தப்படுகிறது. இதில்  எம்சாண்ட் என அனுமதி கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். ஒரு லாரிக்கு மாதம் 15,000 வீதம் 12 லாரிக்கு 1.80 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கிறார்கள். இந்தத் தொகை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த எஸ்.பி இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால் அவருக்கு எதிராகக் காவல்துறையினரே கலவரத்தைத் தூண்டுகிறார்கள்” என்கிறார் வேதனையாக.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!