வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/02/2018)

கடைசி தொடர்பு:14:47 (15/02/2018)

``கமர்ஷியல் ஆனதால் மவுசை இழந்தது காதலர் தினம்'' - ஆய்வில் தகவல்

வ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர்தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், 68 சதவிகித இந்திய இளைஞர், இளைஞிகளுக்கு வாலன்டைன் டே  கொண்டாடுவதில் உடன்பாடு இல்லையென்று  ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியர்களிடையே மவுசை இழந்தது காதலர் தினம்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல திருமணப் பதிவு இணையதளம், காதலர் தினத்தின்மீது கொண்டுள்ள  நம்பிக்கைகுறித்து ஆய்வு நடத்தியதில், இந்த முடிவு கிடைத்துள்ளது. 32 சதவிகிதம் பேரே  இந்த தினத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளனர். 61 சதவிகிதம் பேர், தங்கள் பிறந்தநாள்தான் 'பிடித்த நாள்' என்று கூறியுள்ளனர். புத்தாண்டு தினத்துக்கு 36 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர். வாலன்டைன் டே பிடித்த நாளாக வெறும் 3 சதவிகிதம் பேரே தெரிவித்துள்ளனர். 

காதலர் தினத்துக்கு, தேவையில்லாமல் அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளதாக 55 சதவிகிதம் பேரும், பிடித்தவருடன் இருந்தால் ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான் என்று 28 சதவிகிதம் பேரும்  தெரிவித்துள்ளனர். அதிகக் கூட்டம் மற்றும் கிளம்பும் எதிர்ப்புகளால் காதலர் தினத்தைக் கொண்டாடுவதில்லை என 17 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இதுவும், மற்ற தினங்களைப்போல சாதாரணமானதா என்ற கேள்விக்கு, 67 சதவிகிதம் பேர் 'ஆம்' என்று பதிலளித்துள்ளனர். 

லவ்வர்ஸ் டே கமர்ஷியலாகிப் போனதால், இந்திய இளசுகளிடையே மவுசை இழந்துள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது. 20 முதல் 35 வயதுடைய இளைஞர்- இளம் பெண்கள் (திருமணம் ஆனவர்கள்- ஆகாதவர்கள்), 8,200 பேரிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க