கருணாநிதிக்கு 3 வது முறையாகச் செயற்கை உணவுக்குழாய் மாற்றம்!

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாகத் தமிழக அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். உடல் நலம் பாதித்த நிலையில், சென்ற ஆண்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கருணாநிதி. அதன் பின்னர் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இடையே சில முறை அறிவாலயத்துக்கு வந்து தி.மு.க தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அவருக்கு தொண்டையில் செயற்கையாக உணவுக்குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன் வழியாகத் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவுக்குழாய் பொருத்தப்பட்டு இருப்பதால் அவரால் பேச முடியாது. என்றாலும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். 

இந்தச் செயற்கை உணவுக்குழாய் இருமுறை புதிதாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 3 வது முறையாக இந்த உணவுக்குழாய் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. பேச்சுப் பயிற்சி பெறும் வகையில் குழாய் அளவைக் குறைத்து புதிய உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!