வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (15/02/2018)

கடைசி தொடர்பு:20:12 (15/02/2018)

விபத்துக்குள்ளான காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! காட்டிக்கொடுத்த சிறுமி

பாலியல் வன்கொடுமை நடந்த கார்

விபத்துக்குள்ளான காரில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீஸ், குற்றவாளிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டினார் என்று கூறினார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காரும், சிவகங்கையிலிருந்து இளையான்குடி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் "இளையான்குடி அருகேயுள்ள திருவள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மின்சாரவாரியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர். இந்தச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் காரை கைப்பற்றி சோதனை செய்த போது சிவகங்கையிலிருந்து வந்த  காரில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்தக் காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது சம்பந்தமாக  தனிப்படை போலீஸாரிடம் பேசியபோது, " சிவகங்கை  நாலுகோட்டை அருகிலுள்ள பேரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதம்மாள் கொடுத்த புகாரில் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி  ஐந்து பேர் காரில் கடத்தி பாலியல் ரீதியான வன்கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சொன்ன  அடையாளங்களை வைத்து  தேடிய போது, இளையான்குடியில்  நடந்த விபத்தில் சிக்கிய கார் நிறம் ஒத்துப்போனது. உடனே காரிலிருந்து தப்பியோடிய இரண்டு பேரை மட்டும் பிடித்துவிட்டோம். மற்ற மூன்று நபர்களை இன்று பிடித்திருக்கிறோம். இவர்களில் பர்மா பாண்டி எட்டு முறை குண்டர்சட்டத்தில் சிறை சென்று வந்தவர்.   சென்னையைச் சுலைமான், பிரபாகரன், மதுரையைச் சேர்ந்த சிரஞ்சீவி, சிவகங்கை சேர்ந்த அருண்பாண்டி, பர்மா பாண்டி ஆகியோர்மீது சிவகங்கை, சென்னை, மணலி, சங்கர்நகர், சாத்தமங்காடு, திருக்கோஷ்டியூர், தேவகோட்டை, மதகுபட்டி, மானாமதுரை,  காரைக்குடி ஆகிய காவல்நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் "பொஸ்கோ"  சட்டம் அவர்கள் மீது  கூடுதலாகப்  பாய்ந்திருக்கிறது. மேலும்  இந்தக் கொள்ளை கும்பலிடமிருந்து எல்சிடி டிவி, 15,000 ரூபாய்,  இருபது பவுன் தங்க நகை எனக் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த பினுவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்தில்  அவர்களை கஷ்டடி எடுத்து  விசாரிக்க இருக்கிறோம்" என்கிறார்கள்.

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க