வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (15/02/2018)

கடைசி தொடர்பு:16:56 (10/04/2018)

வீட்டுக்குள் காற்று மாசுபாடு! பட் பயப்பட வேண்டாம்... ( Sponsored Content )

 

 

​உங்களுக்குத் தெரியுமா, வெளிச் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றைவிட உட்புறங்களில் அதிக மாசு இருக்க வாய்ப்புள்ளது என்று? பாக்கெட்டிலோ பர்ஸிலோ கைவிட்டு மூக்கைக் கைக்குட்டையால் மூட எத்தனிப்பவர்கள் கவனத்துக்கு சொல்லவருவது என்னவென்றால்: காற்று மாசுபாடு என்றாலே நம் நினைவுக்கு வருவதெல்லாம் தானியங்கி வாகனங்கள் மற்றும் நிறுவன ஆலைகள் வெளிப்படுத்தும் புகைதான். இதைவிட உட்புறங்களில் காற்று மாசுபாடு 5 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்கிறது ஒரு அதிர்ச்சித்தகவல். காரணமென்ன ட்யூட் என்றால், 'ஃபார்மால்டிஹைட்' எனும் கரிமக் கலவைதான்! மரச் சாமான்கள், கிருமி நாசினிகள், காற்று தூய்மைப்படுத்திகள் (air fresheners), பசைகள் மற்றும் மின்கசியாமல் தடுக்கும் பொருள்கள் ஆகியவற்றுள் சுலபமாக 'ஹைட்' ஆகியுள்ளது இந்த ஃபார்மால்டிஹைட்.

நிப்பான்

இப்பொருள்களில் இருந்து நாள்கணக்கில் சிறுகச்சிறுக ஃபார்மால்டிஹைட் நிறமில்லா வாயுவாக வெளிவருகிறது, முறையான காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் அறைகளில் படிந்துவிடுகிறது. காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் இதனால் கண், தொண்டை மற்றும் மூக்கில் எரிச்சல் உண்டாகிறது, மேலும் இது பல கொடிய நோய்களைக்​ கூட கையைப் பிடித்துக் கூட்டி வந்துவிடக்கூடும்.

 

நிப்பான்தீர்வுதான் என்ன?

நிப்பான்

ஆன்டி ஃபார்மால்டிஹைட் மற்றும் ஆக்டிவ் கார்பன் தொழில்நுட்பம் நமக்குக் கைக்கொடுக்கின்றன. எந்த ரூபத்தில் உதவுகிறது என்றால், நாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க/வண்ணமடிக்கப் பயன்படுத்துகிறோமே, அதேபெயின்ட்தான் இதிலிருந்தும் நம்மைக் காக்கிறது. 

 

இன்று சந்தையில் கிடைக்கும் பெயின்ட்களில் குறிப்பிட்ட சிலவகை மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன.  ஜப்பானியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "நிப்பான் பெயின்ட்" வழங்கும்"ஓடெர்லெஸ் ஏர்கேர் - Odour-less AirCare" வகை பெயின்ட்கள் இதில் ஒருவகை. 

 

அறிவியல் மிக முக்கியம் அமைச்சரே:

 

இந்தப் பெயின்ட்டில் உள்ள பாலிமர் தொகுப்புகள் ஃபார்மால்டிஹைட் வாயுவை உறிஞ்சி, நீராவியை வெளியேற்றுவதால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு சுற்றுப்புறத்தையும் குளுமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. புதிதாக பெயின்ட் அடித்தாலே, ரோட்டில் ஸ்கூட்டி ஓட்டிச்செல்லும் பெண்போல ஒரு வாரத்துக்கு முகத்தில் துணி கட்டிக்கொண்டு அலைய வேண்டிய அவலநிலையுள்ளது. இதைப் போக்கியுள்ளது இந்தத் தொழில்நுட்பம். 

விரைவில் காற்றில் ஆவியாகிவிடும் கரிமக் கலவைகள் மிக மிகக் குறைந்தளவில் இருப்பதால், பெயின்ட் வேலைகள் முடிந்தவுடனேயே அந்த இடத்திற்கு இடம்பெயர்ந்துகொள்ளலாம். எனவே, மருத்துவமனைகள், பள்ளிகள், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகள் போன்ற இடங்களுக்கும், பிற வணிகரீதியான கட்டிடங்களுக்கும் பயன்படுத்த இந்தப் பூச்சு சிறந்த தேர்வாக அமைகிறது.

நிப்பான்இது 'வெயிட்'டான பெயின்ட்:

நுண்கிருமிகள் வளர்வதைத் தடுக்கும் திறன் 

ஈயம் மற்றும் பாதரசம்... கிடையாது!

நெடி உண்டாக்காத நண்பன்

சுலபமாக கழுவக்கூடிய அம்சம்

சோப்பு கலந்த தண்ணீரை வைத்துத் துடைத்தாலே போதுமானது

 

 

 

 

எனவே, தை மாதம் வேண்டாம், சித்திரையில் அடித்துக்கொள்வோம் வெள்ளை என இருந்துவிட்டவர்களுக்கு இந்த செய்திகள் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்திருக்கும்; தூய்மையான சுற்றுச்சூழல் பெற உதவும் நிப்பான் ஓடெர்லெஸ் ஏர்கேர் பெயின்டுக்கு ஒரு ஹை-ஃபை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க