சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 109 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை..!

இலங்கையில் சிறை வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 136 பேரில் 109 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 109 பேர் விடுதலை.

எல்லைத் தாண்டி சென்றதாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை,  நாகபட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 136 மீனவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 180-க்கும் அதிகமான படகுகளையும் முடக்கி வைத்துள்ளனர். சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் முடக்கி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்கக்கோரி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். 

இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 109 மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை அரசு. இதற்கான பரிந்துரை கடிதத்தினை இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் பருத்தித்துறை நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 109 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். 

இதனைத்தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு சில தினங்களில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சிறையில் உள்ள எஞ்சிய 27 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு இன்னும் ஒரு சில தினங்களில் பரிந்துரைக் கடிதம் அளிக்கும் எனவும் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!