வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:06:40 (16/02/2018)

இன்று காவிரி வழக்கில் தீர்ப்பு..! ஓசூரில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்

காவிரி, cauvery

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இன்று காலை 10 மணியளவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் வழியாக பெங்களுரு செல்லும் பேருந்துகள் பல தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, மதுரை, நெல்லை, வேலூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் இருந்து பெங்களுருக்கு செல்லும் பேருந்துகள் நேற்று இரவு 11 மணி முதல் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று பெங்களுரில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக பேருந்துகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் தமிழக பஸ்கள் அனைத்தும் வேலூரிலிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் என தகவல் வெளியானதால் இந்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.