சர்வதேச யோகா போட்டியில் தங்கம் குவித்த தமிழக மாணவர்கள்..!

யோகா

சர்வதேச யோகா போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ஈரோட்டில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘சர்வதேச சவுத் ஆசியன் கோல்டன் கப் - யூத் ரூரல் கேம்ஸ்’ போட்டி பூடான் நாட்டில் பிப்ரவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கபடி, கராத்தே, யோகா, அத்லடிக் என 8 வகையான விளையாட்டுகள் இதில் இடம்பெற்றன. இப்போடியில் இந்தியா, பூடான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

யோகா

இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஹரினிஷா 9 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், பிரதிக்ஷா 10 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவி வேதவி 13 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவி சம்யுக்தா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவர் கவின்ராஜ் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவர் அரவிந்த் ஓப்பன் கேட்டகிரியிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், இப்போட்டியில் இந்திய யோகா அணி ஒட்டுமொத்த பிரிவிலும் கலந்துகொண்டு பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளனர். 

போட்டியை முடித்துவிட்டு பதக்கத்துடன் ஈரோட்டிற்கு திரும்பிய சாதனை மாணவ, மாணவிகளை பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பலரும் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!