வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (16/02/2018)

கடைசி தொடர்பு:14:54 (16/02/2018)

தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் `தீர்ப்பு’ - டி.டி.வி.தினகரன்

உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி தீர்ப்பானது, தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தீர்ப்பு என டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் தேர்தலில் `குக்கர்’ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி தீர்ப்பை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.  தமிழக விவசாயிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழக பாசன பரப்பின் அளவும் கேள்விக் குறியாகவுள்ளது. 

அதனால், தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரின் அளவை உடனடியாக வழங்கிட வேண்டும். இதை, மத்திய அரசு சற்றும் தாமதிக்காமல் உறுதி செய்திட வேண்டும் என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.