வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (16/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (16/02/2018)

டி.என்.சேஷனுடன் கமல்ஹாசன் சந்திப்பு! மீண்டும் சந்திப்பேன் எனப் பேட்டி

கமல்

முன்னான் தலைமைச் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதனிடையே, தனது கட்சியை பதிவு செய்ய கமல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். கட்சிப்பதிவு தொடர்பாக டிஎன் சேஷனுடன் கமல் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களே இந்த சந்திப்பு நடந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என்றார். அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற தங்களை சந்திக்கலாம் என சேஷனிடம் கேட்டேன்" என்றார்.