வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (16/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (16/02/2018)

`விதிகளை மீறும் மணல் குவாரிகளை மூடுங்கள்!' - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் மணல் குவாரிகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC


தமிழகத்தில் சில மணல் குவாரிகள் விதிகளுக்குப் புறம்பான வகையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மணல் குவாரிகள் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் குவாரிகளை மூட ஆணை பிறப்பித்தது. மேலும், நீதிமன்றம் மணல் குவாரிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதைத் தடுக்க குவாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். மணல் குவாரிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படவேண்டும். மணல் கடத்தலைத் தடுக்க தனி  செயலியை உருவாக்க வேண்டும். மணல் அள்ளுவதற்கான ஒப்பந்த முறையை ரத்து செய்து வெளிப்படையான டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டுமென்று நீதிபதிகள் பிறப்பி்த்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றது நினைவுகூரத்தக்கது.