`மைக் கிடைத்தால்போதும் உளறிக் கொட்டுவார்' - தங்க தமிழ்ச்செல்வனை வறுத்தெடுத்த ஓ.பி.எஸ் மகன்

தங்க தமிழ்ச்செல்வன் மைக் கிடைத்தால் உளறுபவர் என்று பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் காட்டமாகக் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று தேனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி சையதுகான் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், தேனி எம்.பி பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், முருக்கோடை ராமர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், "ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இவர்களுக்கு இருந்த பயம் இப்போது இல்லை. தேனி மாவட்டத்தில் அப்படி  ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் முன்னால் ஒரு மைக் இருந்தாலே உளறுவார். இப்போது 10 மைக் அவர் முன் வந்துவிட்டது. அப்போது எப்படி உளறுவார் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அவரது உளறல்களைத் தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு முறை எம்.பி பதவிக்கு தங்கதமிழ்ச் செல்வன் நிற்க வைக்கப்பட்டபோது தோற்றுவிடுகிறார். தான் தோற்றதற்கு டி.டி.வி.தினகரன்தான் முதல் காரணம் என்று ஜெயலலிதாவிடம் சொன்னவர் இதே தங்க தமிழ்ச்செல்வன்தான். ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலுக்காக, சுயநலத்துக்காக வீடியோ வெளியிட்டவர்கள் இவர்கள். அவர்களை விசாரணை ஆணையத்தின் ஆறுமுகசாமிதான் காப்பாற்ற வேண்டும்" என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!