கரூரில் நலத் திட்டங்களுக்கு அடிக்கால் நாட்டினர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

425.15 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் விரைவில் கரூர் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதியில் 425 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் மற்றும் தார்சாலை பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை போட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று(16.02.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 356 லட்ச ரூபாய் மதிப்பில் 16 வகுப்பறைகள் மற்றும் 3 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டவும், தோகைமலை ஒன்றியம், கூடலூர் ஊராட்சியில் குன்னாகவுண்டன்பட்டி முதல் பேரூர் தேசியமங்கலம் சாலை வரை ரூ.45.50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும், கழுகூர் ஊராட்சி, மணப்பாறை சாலை முதல் செம்பாறை கல்லுபட்டி வரை ரூ.23.65 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி என  மொத்தம் 425 லட்ச ரூபாய் மதிப்பில் பூமி பூஜை போட்டு பணிகளைத் தொடங்கிவைத்தார்.  இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர்.அன்பரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.பாப்பாசுந்தரம், சசிகலாரவி, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!