வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (17/02/2018)

கடைசி தொடர்பு:10:38 (17/02/2018)

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர்!

ஒரு சாமான்ய இடத்திலிருந்து, இன்று தமிழ் சினிமா வர்த்தகத்தில் கனிசமான பங்கைத் தன்வசம் வைத்துள்ளவர், சிவகார்த்திகேயன். தோல்விகள் துரத்தும்போது, முயற்சிகளாலே அனைத்தையும் முறிடித்து, குறுகிய காலத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். இன்று (பிப்ரவரி 17) பிறந்தநாள் காணும் சிவகார்த்திகேயனுக்கு பல்வெறு தரப்பட்ட ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதையொட்டி,  'சீம ராஜா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

சீமராஜா

'ரெமோ', 'வேலைக்காரன்' படங்களைத் தொடர்ந்து, ஆர்.டி ராஜா தயரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. இமான் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.