வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (17/02/2018)

கடைசி தொடர்பு:13:17 (17/02/2018)

6 நாள்களுக்குப் பிறகு எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

எல்.பி.ஜி டேங்கர் லாரி

கடந்த 23-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட புதிய டெண்டர் அறிவிப்பில், மாநில அளவில் மட்டுமே டெண்டர் நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், நாமக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறக்கோரி, கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த ஆறு நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், டெண்டர் விதிமுறையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததை அடுத்து, இன்று நாமக்கல்லில் நடைபெற்ற எல்.பி. ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.