தனியார் கல்விக் குழுமத்தில் தொடரும் சோதனை! கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

தனியார் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதோடு, வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் கல்விக் குழுமத்தினர்.

 தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் வீடு, திருச்சியில் வசிக்கும் அவரின் மகன் கதிரவன் வீடுகளிலும் சிட்பண்ட்ஸ்,  மெடிக்கல் காலேஜ், நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மெட்ரிக்குலேசன் பள்ளி, சக்கரை ஆலைகள் என 31 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். மூன்றாவது நாளான இன்றும் சீனிவாசன், அவரின் மகன், மருமகள், பிஜப்பூர், கர்நாடகாவில் உள்ள அவரது சக்கரை ஆலைகள் எனப் பல இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு, பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதோடு, சிறு கல்வி நிறுவனமாகத் தொடங்கப்பட்ட சீனிவாசன் நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளில் பொறியியல், பாலிடெக்னிக், கலைக்கல்லூரி, மருத்துவம் என 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் எனக் கல்விக் குழுமமாக வளர்ந்துள்ளது. அதேபோல் கணக்கில் வராத பல தொழில்களும் தொடங்கியது எப்படி, இதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்றெல்லாம் கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

 தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் கூறியதாவது. ``இந்தக் கல்விக் குழுமத்தில் சொந்தமான பல இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையை நியாயப்படுத்தும் வகையில் பல கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம். கர்நாடகாவில் உள்ள இந்தக் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான சக்கரை ஆலை, கல்வி கூடங்களிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளோம். இன்னும் கணக்கில் வராத பல தொழில்களைத் தொடங்கியிருக்கிறார்கள். அவற்றைப் பற்றி முழுமையாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்று முடித்துக்கொண்டார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!