போலீஸ் படை வாபஸ்! அழகிரியைப் பாதுகாக்கும் தனி ஒருவர்!

முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க-வின் தென்மண்டல அமைப்பாளராகவும் இருந்த மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது அவருடைய ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உரத்துறை அமைச்சராக அழகிரி பதவி வகித்தபோது, அவருடைய மதுரை வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உட்பட மூன்று போலீஸாரும் அவர் வெளியில் செல்லும்போது துப்பாக்கி ஏந்தியவர் உட்பட நான்கு போலீஸாரும் காவலுக்குச் சென்றனர். அவருடைய அமைச்சர் பதவி முடிந்தும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கிவந்தது.

அழகிரியின்

இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. தேவையற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளால் செலவைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதால், மதுரை காவல்துறை அழகிரிக்கு வழங்கி வந்த பாதுகாப்பைத் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும், அவருக்கு ஒரேயொரு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு அனுமதித்துள்ளனர். ''பி.ஜே.பி ஆட்சியில் செல்வாக்கு இல்லாத பலருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான அழகிரிக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது பாரபட்சமான நடவடிக்கை'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!