`எங்கே போனீர்கள் அம்மாவின் வாரிசுகள்' - தினகரனுக்கு எதிராகப் பொங்கிய கொறடா

கமல், ரஜினி, தினகரன் இவர்கள் மூவரும் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தமிழக அரசுக் கொறடா ராஜேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 

தினகரன் - அரசு கொறடா

அ.தி.மு.க-வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் அரசுத் தலைமைக் கொறடா தாமரை. ராஜேந்திரன் தலைமையில் அரியலூரில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசியதாவது. ``அ.தி.மு.க-வை குடும்ப சொத்தாக்க வேண்டும் என எண்ணியவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விட்டார்கள். அவர்கள் அடுத்த அஸ்திரமாக நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கூறிக்கொண்டு திரிகிறார்கள். இது நகைப்பாக இருக்கிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்பட திறப்பு விழாவுக்கு வராததற்கு என்ன காரணம். எதிர்க்கட்சிதான் கலந்துகொள்ளவில்லை. அம்மாவின் வாரிசு என்று சொல்லும் நீங்கள் ஏன் அம்மாவின் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் வாரததற்கு தி.மு.க-வுடன் கைகோத்துள்ளதாக எங்களுக்கு எண்ணத்தோன்றுகிறது. அம்மாவால் ஒதுக்கபட்டவர் நீங்கள். எப்படி அரசியல் வாரிசு ஆகலாம் எனக் கடுமையாகத் தினகரனைத் தாக்கிப் பேசினார்.

அரசு தலைமை கொறடா தாமரை.இராஜேந்திரன்

''தி.மு.க ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதில்லை. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே ஏழைகளுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எங்களால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும். ஆனால், தி.மு.க-வால் முடியுமா'' என சபதமிட்டார். அடுத்ததாக, ''கமல், ரஜினி மற்றும் தினகரன் போன்றவர்கள் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஜெயலலிதாவின் பிறந்தநாளை அனைத்துக் கிராமங்களிலும் புதிய கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்.அம்மா இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு அம்மாவின் அரசை நிலைநாட்ட பாடுபங்கள்'' என்று கடுகடுத்து முடித்தார் கொறடா.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!