"எண்ணெய், இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ளத் தயார்"- ஈரான் அறிவிப்பு

இந்தியாவுடன் தங்கள்   நாட்டின் எண்ணெய்  மற்றும் இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹாணி  விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஈரான் அதிபர்

ஈரான் அதிபராக பதவியேற்றபின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக, இருநாட்டு உறவு மேம்படும் வகையில்  ஹைதெராபாத் வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன், நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடித்தவுடன்  பேசிய அவர், " கடல் வழியாக இந்திய மக்கள் ஆப்கனிஸ்தான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல உதவும் வகையில் ஈரானின் சபஹார் துறைமுகத்தை பயன் படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்" என்றார் . மேலும் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்காக , ஈரானின்  எண்ணெய்  மற்றும் இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளதாக  கூறினார். 

உலகிலுள்ள அணைத்து முஸ்லீம் மக்களும் தங்கள் கருத்துவேறுபாட்டினை மறந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு அனைத்து  முஸ்லிம்களும்  ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். 

இச்சுற்றுப்பயணத்தின் திட்டத்தில் ஒன்றாக, இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து அவர் பேசுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!