சுற்றுப்பயண விவரத்தை அறிவித்தார் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி அப்துல் கலாம் நினைவிடத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவும், மதுரையில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன்படி இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, வரும் 21-ம் தேதி சுற்றுப் பயணத்துக்கான விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன்

காலை 7.45 மணி : அப்துல் கலாமின் இல்லத்துக்கு வருகிறார்.
காலை 8.15 மணி : அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் செல்கிறார். 
காலை 8.50 மணி : கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்திக்க இருக்கிறார்
காலை 11.10 மணி : அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் செல்கிறார். 
காலை 11.20 மணி : நினைவில்லத்தில் இருந்து மதுரைக்குப் புறப்படுகிறார்.
நண்பகல் 12.30 மணி : ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். 
பிற்பகல் 2.30 மணி : பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலின் முன் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 
பிறபகல் 3.00 மணி : மானாமதுரை ஶ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
மாலை 5 மணி : மதுரையில் உள்ள ஒத்தைக்கடை மைதானத்துக்கு வருகிறார்.
மாலை 6 மணி : தான் அறிவிக்கவிருக்கும் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுகிறார்.
மாலை 6.30 மணி : பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
இரவு 8.10 முதல் 9 மணி வரை : தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி உரையாற்றுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!