வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:00:30 (18/02/2018)

பி.ஜே.பியும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைக்குமா?- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது இதுதான்

வரும் தேர்தலில் பி.ஜே.பியும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைப்பதை இருவர்தான் தீர்மானிப்பார்கள் என்றும், பி.ஜே.பிக்கும் அ.தி.மு.க-வுக்கும் அரசியல்ரீதியான உறவு கிடையாது எனறும் கூறினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப்பணியாளர்கள் இணையத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர் கோபால் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,“சிங்கப்பட்டியில் விற்ற ஆவின்பால் இப்போது சிங்கப்பூர் வரை சென்று இருக்கிறது.இதில் கலப்படம் கிடையாது. தாய்ப்பாலிற்கு நிகரானது ஆவின் பால். ஆவின் பால் பாதுகாக்கப்படுவதாலேயே வெளிநாடுகளிலும் விரும்பி வாங்குகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,“பால்வள உற்பத்தியாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி கூறியதால்தான் இணைந்தேன் எனப் பேசியிருப்பது அவரின் எதார்த்தமான பேச்சு. அதைப்போல் நிர்வாக ரீதியாகப் பிரதமர் மோடி கூறுவதை நாங்களும் கேட்போம். ஆனால் பி.ஜே.பிக்கும் அ.தி.மு.கவுக்கும் அரசாங்க ரீதியான உறவுதான் தொடர்புள்ளதே தவிர, அரசியல் ரீதியான உறவு துளியும் கிடையாது. வரும் தேர்தல்களில் பி.ஜே.பியுடன் கூட்டணி வைப்பது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவு செய்வார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கமல்,ரஜினி கூறிய கருத்து அவர்களின் தனிப்பட்டக் கருத்து, அவர்கள் வெளியே இருப்பதால் என்ன கருத்து வேண்டுமானாலும் கூறலாம். அரசாங்க பொறுப்பில் இருக்கும் நாங்கள் கருத்து கூற முடியாது. இந்தத் தீர்ப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்யும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க