வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:13:00 (18/02/2018)

ராகவேந்திரா மடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

கட்சி தொடங்கப்போவதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. மேலும், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி என நாளுக்கு நாள் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இதன் முதற்கட்டமாக, மாவட்ட வாரியாகத் தனது மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துவரும் அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் கட்சிப் பெயர் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பயணம் அமையும் என்றும், அநேகமாக திருச்சியில் முதல் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அவரது மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ரஜினிகாந்த் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார். சிறிது நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ரஜினியின் வருகையை அறிந்து அங்கு மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க