``இளைஞர் தலையை பேருந்து நிறுத்தத்தில் வீசிச் சென்ற கொலையாளிகள்!’’ - சாயல்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்

 

சாயல்குடி அருகே வாலிபரின் தலையைத் துண்டித்து அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து சென்ற கொடூர கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மணி என்ற மணிகண்டன் (25). இவர் சில கொலை வழக்குகளில் சம்பந்தபட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு,  உடலை சாயல்குடி அருகே உள்ள இருவேலி பகுதியிலும், கோவிலாங்குளம் அருகே உள்ள அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் தலையையையும் கொலையாளிகள்  வைத்து வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
பேருந்து நிறுத்தத்திற்கு இன்று (18.2.2018) காலை வந்த பயணிகள் துண்டிக்கபட்ட நிலையில் இருந்த தலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சாயல்குடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவே, இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெரி, பெருநாழி இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் மணிகண்டனின் உடல் மற்றும் தலையினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலையான மணிகண்டன் மீது சில கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதம் காரணமாகவோ அல்லது பழிக்கு பழி வாங்கும் எண்ணத்துடனோ இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!