தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் மௌத் ஆர்கன் வாசித்து அசத்தும் யானை!

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோயில் யானை ஒன்று மௌத் ஆர்கன் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

யானை 

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகள் மற்றும் தனியார் யானகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்ட தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம், கடந்த ஜனவரி 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 48 நாள்கள் நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு உடல் பரிசோதனை, எடை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடைபெறும். இந்த முகாமில் ஆண்டாள் என்ற யானை கலந்துகொண்டுள்ளது. இந்த ஆண்டாள் யானை மௌத் ஆர்கன் வாசித்து புத்துயிர் முகாமில் அனைவரையும் அசத்தி வருகிறது. மௌத் ஆர்கன் இசைக்கருவியை வாசிக்க ஜம்போ இசைக்கலைஞர் ஒருவர் யானைகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.

அதன்படி பாகன் மௌத் ஆர்கனை கொடுத்ததும் அதை வாங்கிய யானை தலையை ஆட்டி, ஆட்டி அழகாக வாசிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோ வெளியிட்ட சில நேரத்தில் யானைக்கு லைக்குகள் குவியத் தொடங்கிவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!