வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (18/02/2018)

சென்னையில் 21-ம் தேதி தொடர் மறியல் போராட்டம்! - ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

ஜாக்டோ ஜியோ

சில மாதங்களுக்கு முன் தொடர் போராட்டங்களை நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்த அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டணி மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாவும், பழைய பென்சனை தொடர்ந்திடவும், 2 வருடங்களாக அறிக்கை அளிக்க இயலாத கையாலாகாத குழுவைக் கலைத்திடவும், காலதாமதம் செய்வோர் மீது நடவடிககை எடுக்கவும், 21 மாத ஊதிய நிலுவையை உடன் வழங்கிடவும், இந்தியர்கள் அனைவரும் ஒன்றென்றால் மத்திய அரசு ஊழியருக்கும் நீதிபதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கியதுபோல் மத்திய அரசு அமுல்படுத்திய தேதியிலிருந்து நிலுவைகளை வழங்கவும், ஏழாவது ஊதியக்குழுவிலிருந்து தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைந்திடவும், சத்துணவு அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் காலமுறை ஊதியம் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 21ஆம் தேதி சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளோம்'' என்றார். இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என திரளானவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க