வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:19 (19/02/2018)

ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு..!

தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இன்ஜினீயர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த அவர், அவரது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த 14-ம் தேதி, இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்றநிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.