வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (19/02/2018)

கடைசி தொடர்பு:16:03 (19/02/2018)

ரஜினி, கமல் சந்திப்பால் எதுவும் நடக்காது..! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ரூஸ்வெல்ட் வின்ஸ்டென் சர்ச்சில் சந்திப்புபோல ரஜினி கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யருக்கு இன்று 164-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாள் விழா, தமிழக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள உ.வே.சாவின் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன், காமராஜ், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் ஜெயகுமார், '3,087 கைப்பிரதிகள், ஓலைச்சுவடிகளைச் சேகரித்து தமிழுக்குத் தொண்டாற்றியவர் உ.வே.சாமிநாதய்யர். ரூஸ்வெல்ட் - வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்புபோல ரஜினி-கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி-கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை' என்று தெரிவித்தார்.