உதயநிதியின் அரசியல் பிரவேசம்குறித்த கேள்விக்கு அழகிரி காட்டமான பதில்!

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த மு.க.அழகிரி, `அரசியல் ஒரு சாக்கடை; அதில் யார் வந்தால் எனக்கென்ன' என்று காட்டமாகக் கூறினார்.

அழகிரி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியில், தன் ஆதரவாளர்  இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு,  'அரசியல் ஒரு சாக்கடை. அரசியலில் யார் வந்தால் எனக்கென்ன, யாரும் வரலாம்' என்று தெரிவித்தவரிடம், தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் காரில் ஏறிப் புறப்பட்டார்.

சமீப காலமாக, தி.மு.க அரசியல் மேடைகளில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டுவருகிறார். அதிலும், மதுரை மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். இது, மதுரையில் தனக்கெனப் பெரும் ஆதரவாளர்களைப் பெற்றுள்ள அழகிரிக்கு எதிராகச் செயல்படுவதுபோல சொல்லப்பட்டுவரும் நிலையில், உதயநிதியைப் பற்றி அவர் இப்படிக் கூறியுள்ளது, கட்சிக்குள் பெரும் சலசலப்பை  உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!