வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (19/02/2018)

கடைசி தொடர்பு:15:27 (19/02/2018)

"அரசாங்கம் கடை வியாபாரிகளுக்கு செய்ய வேண்டியது இதுதான்!" #VikatanSurveyResult

தீ விபத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்களா?

  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தீ விபத்து காரணமாக, அங்குள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மீட்புப் பணியாளர்கள் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதுரை கோயிலில் இருக்கும் கடைகளை அகற்றுவது தொடர்பாக விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

4) கோயிலில் இருக்கும் கடைகளை அகற்றினால், வியாபாரிகள் என்ன செய்வது?

இந்தக் கேள்விக்கு, "அரசாங்கமோ அல்லது கோயில் நிர்வாகமோ வியாபாரிகளுக்கு மாற்று இடம் அமைத்துத் தர வேண்டும். அப்படி அமைக்கும் இடம், கோயிலுக்கு மிக அருகில் இருக்குமானால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். தவிர, கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், வெளியூர்களில் இருந்து வருவதால் மதுரையில் கிடைக்கும் பொருள்களை வாங்கிச் செல்ல விரும்புவார்கள். எனவே, கோயிலுக்கு அருகிலேயே அந்தக் கடைகளை அமைக்கும் வகையில் ஒரு மைதானம் ஏற்படுத்திக் கொடுத்தால் சிறந்தது" என்ற பதிலை பெரும்பாலானோர் கூறியிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்