ஊட்டி மார்க்கெட்டில், பழைய ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ பழைய ஆட்டிறைச்சியை, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

 

இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் கூறுகையில், “வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டிறைச்சி கடையில் சோதனை செய்ய நேர்ந்தது. அப்போது கடையில் தொங்கவிடப்பட்டிருந்த இறைச்சி பழையதாகத் தெரிந்தது. உடனடியாக நகராட்சி ஆட்டுத்தொட்டிக்குப் போன் செய்து விசாரித்தபோது, இந்தக் கடைக்காரர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 5 ஆடுகளை விற்பனைக்காக அறுத்துள்ளார். ஆனால், இவர் கடையில் ஸ்டாக்காக 8 ஆடுகள் வரை வைத்துள்ளார். எனவே, இது சுமார் 2 அல்லது 3 நாள்களுக்கு முன்னதாக அறுக்கப்பட்ட ஆடாக இருக்கலாம். எனவே, 40 கிலோவுக்கும் அதிகமான சுமார் ரூ. 20,000 மதிப்புள்ள பழைய இறைச்சியைப் பரிமுதல் செய்து அழித்து, கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த முறை தவறு நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!