``நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்போராட்டம்'' - கி.வீரமணி தகவல் | We will approach court against NEET says Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (19/02/2018)

கடைசி தொடர்பு:19:15 (19/02/2018)

``நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்போராட்டம்'' - கி.வீரமணி தகவல்

  ''நீட்டுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தவுள்ளோம், என்று அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. 

மதுரையில் நடந்த  திராவிடர் கழக மண்டலக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நீட்தேர்வுக்கு ஏதிராக மாணவர்கள் 22-ம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய இரண்டு தீர்மானங்களின் நிலை என்னவென்று  தெரியவில்லை. தீர்மானம் தொடர்பாகக் கேட்பது சலுகை இல்லை, மாநில அரசின் உரிமை. இதனால், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

கி.வீரமணி

திராவிடர் கழகம் சட்ட போராட்டம் நடத்த  முடிவெடுக்கபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்புக்கு கட்டுபடாதவர்கள் யாராக இருந்தாலும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்று கூறி உடனடியாக நீட்தேர்வை அமல்படுத்தியது, அதேபோல்  காவேரி விஷயத்தை அலட்சியப் படுத்தாமல் செயல்பட வேண்டும். காவிரி தீர்ப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. கடலில் எல்லை தாண்டும் மீனவர் மீது இலங்கை அரசு 20 கோடி அபதாரம் விதித்துள்ளது. இதை மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்களைப் பாதிக்கும் இந்தச் சட்டத்தை இலங்கை அரசு வாபஸ் பெற மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க